முட்டை கையிருப்பில் திடீர் தட்டுப்பாடு
முட்டை கையிருப்பில் தட்டுப்பாடு
முட்டை கையிருப்பில் அண்மைய நாட்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை இந்த தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முட்டை விலை மீண்டும் உயர்வு
தற்போதைய நாட்டின் சூழ் நிலையில் முட்டை விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு முட்டை, 50 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலையில், தற்போது, ஒரு சில வர்த்தக நிலையங்களில், 53 ரூபாவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதுடன் கட்டுப்பாட்டு விலை இன்மையும் இவ்வாறான நிலமைகள் ஏற்படுவதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலமைகளால் மக்கள் முட்டைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.