இலங்கைக்கு வெளிநாட்டு வைத்தியர்களை அழைக்கும் நிலை ஏற்படலாம்
நாட்டில் தொடர்ந்து வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்படுமானால் மாற்றுவழி ஒன்று நடைமுறையாகும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி வைத்தியர்கள் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டிலுள்ள வைத்தியர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப் பணமும் தற்போது நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையுமே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பிரதான காரணமாக உள்ளது.
வைத்தியர்களின் எண்ணிக்கை
இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலைகளில் நடைபெறும் சிகிச்சை முறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில், இருவர் இருந்த இடத்தில் ஒருவரையும் அல்லது மூவர் இருந்த இடத்தில் இருவரையும் பணிக்கமர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
