கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் பற்றாக்குறை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக எண்பு முறிவு மற்றும் கண் சிகிச்சை பிரிவுகளுக்குரிய வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மல்லாவி மற்றும் விசுவமடு உடையார்கட்டு ஆகிய பிரதேச மக்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் சிசிச்சை வழங்கும் பிரதான வைத்தியசாலையாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
இந்நிலையில் பொது வைத்தியசாலையின் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு கண் சிகிச்சை பிரிவு என்பவற்றுக்கான வைத்திய நிபுணர்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இல்லாத நிலை காணப்படுகின்றது.
மருந்து நிபுணர்
அத்துடன் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் மாத்திரமே கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏ-09 பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வைத்திய சாலையில் விபத்துக்களில் காயமடையும் அதிகளவானவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இவ்வாறு வைத்திய நிபுணர்கள் இன்மை மயக்க மருந்து நிபுணர் பற்றாக்குறை என்பன நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன.
இந்த விடயத்தில் மாகாண சுகாதார அமைச்சுமற்றும் மத்திய சுகாதார அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
