நாடளாவிய ரீதியில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு: நுகர்வோர் பெரும் சிரமம்
நாடளாவிய ரீதியில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையினால் அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.
கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதை காண முடிகின்றது.
மேலும் எந்தவொரு எரிவாயு சிலிண்டர்களும் சில தினங்கள் விநியோகப்படாமையினால் பல பகுதிகளிலும் எரிவாயு தட்டுப்பாடு உணரப்பட்டுள்ளது.
எரிவாயுக்கள் தட்டுப்பாடு
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு,மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களின் முன்பாக மணிக்கணக்கில் காத்திருந்து பொதுமக்கள் சமையல் எரிவாயுவை பெற்றுச் செல்கின்றனர்.
அதிலும் எதிர்வரும் நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம் காத்திருந்து பெற்றுச் செலகின்றனர்.