நாட்டில் தேங்காய்க்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு: தென்னை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
நாட்டில் இந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி முப்பது சதவீதம் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
தென்னை பயிர்ச்செய்கைக்கு பரிந்துரைக்கப்படும் உரங்கள் முறையாக கிடைக்காத காரணத்தினாலேயே இந்நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து தென்னை ஆராய்ச்சி நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் வினவிய போது, உரம் இல்லாததால் வளர்ச்சி குறைந்த தென்னை மரங்களுக்கு உரமிட ஆரம்பித்தாலும் தென்னை மரங்கள் மீண்டும் வளர்ந்து சரியான அறுவடைக்கு வர குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
தேங்காய்களின் ஆண்டு பற்றாக்குறை
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 2019 ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி, தேங்காயின் வருடாந்த தேவை 4.9 பில்லியன் காய்கள் ஆகும்.
அவற்றுள் உள்நாட்டு நுகர்வுக்குத் தேவையான தேங்காய்களின் எண்ணிக்கை 1.8 பில்லியன் காய்கள் மற்றும் நாட்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்குத் தேவையான தேங்காய்களின் அளவு 1.8 பில்லியன் காய்கள் ஆகும்.
மேலும் ஏற்றுமதி தொடர்பான பொருட்களுக்கு தேவைப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை 1.3 பில்லியன் காய்கள்.
ஆனால் நாட்டின் தேங்காய் அறுவடை 3.1 பில்லியன் காய்களாக உள்ளது. இந்த புள்ளிவிவரங்களின்படி, தேங்காய்களின் ஆண்டு பற்றாக்குறை 1.8 பில்லியன் காய்கள்.
அத்துடன். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை பயிர்ச்செய்கை வாரியத்துக்கு சொந்தமான நிலங்களில் கூட கடைசியாக உரமிடப்பட்டது என நேற்று நடந்த கூட்டுறவு குழுக் கூட்டத்தில் தெரியவந்தது.
பல ஆண்டுகளாக உரமிடப்படவில்லை
எவ்வாறாயினும், வெற்றிகரமான பயிர்ச்செய்கையை பராமரிப்பதற்கு, வருடாந்தம் தோட்டங்களுக்கு உரங்களைப் பயன்படுத்த வேண்டும், ஆனால் இலங்கையில் உள்ள பெரும்பாலான தென்னந்தோப்புகளுக்கு பல ஆண்டுகளாக உரமிடப்படவில்லை.
இதனால் தற்போதுள்ள நோய், பூச்சிகளுக்கு மரங்களின் எதிர்ப்பு சக்தி வாடி வருவதாகவும், இதனால் விவசாய நிலங்களில் ஏற்கனவே நோய்கள் பரவி வருவதால் தென்னை அறுவடைக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுவதாகவும் கோப் குழுவில் தெரியவந்தது.
இதுகுறித்து தென்னை ஆராய்ச்சி நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் வினவியபோது, உரம் இல்லாததால் வளர்ச்சி குறைந்த தென்னை மரங்களுக்கு உரமிட ஆரம்பித்தாலும் தென்னை தோட்டம் மீண்டு வளர்ந்து சரியான அறுவடைக்கு வர குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
