வைத்தியசாலைகளில் ஏற்படப்போகும் பாரிய பிரச்சினை!
வைத்தியசாலைகளில் நிலவும் கனிஷ்ட ஊழியர்களின் பற்றாக்குறை வைத்தியசாலை சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை தோற்றுவிப்பதாக சுகாதார சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் கனிஷ்ட ஊழியர்களின் பற்றாக்குறை பத்தராயிரத்தை (10,000) தாண்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள்
வெற்றிடங்களை நிரப்ப எதிர்காலத்தில் சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம் (1,900) பேரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு (1,100) வெற்றிடங்கள் இருப்பதாக சுகாதார சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் வலியுறுத்தினார்.
புதிய ஆட்சேர்ப்புகளின் கீழ், தற்போது மருத்துவமனைகளில் தன்னார்வலர்களாகப் பணிபுரிபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இதனால், கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு(1,500) பேர் சுகாதார சேவையில் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேரர் கூறினார்.

வெற்றிடங்கள் காரணமாக, ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு மக்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.