மல்லாவியில் வியாபார நிலைய உரிமையாளரொருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - மல்லாவியில் வியாபார நிலைய உரிமையாளரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (13.11.2026) இடம்பெற்றுள்ளது.
நாதன் என்று அழைக்கப்படும் 51 வயதுடைய சின்னத்தம்பி ராஜேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
சடலமாக மீட்பு
காலை வேளையில் வியாபார நிலையத்தை திறப்பதற்காக வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
இதன்போது அங்கிருந்து கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மல்லாவி வைத்தியசாலையில் இருந்து உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
