கடை உரிமையாளர் கொடூரப் படுகொலை! முன்னாள் இராணுவச் சிப்பாய் உட்பட மூவர் கைது
குருநாகலில் கடை ஒன்றின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (9.2.2026) குருநாகல்- யக்வில, தம்பாடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
42 வயதுடைய தளபாடங்கள் தயாரிக்கும் கடை ஒன்றின் உரிமையாளரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை
இவரது மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40, 45 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri