மன்னாரில் மாட்டு இறைச்சி விற்பனை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மன்னார் மாவட்டத்திலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் நாளை (10) முதல் மாட்டு இறைச்சியை நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சியின் நிர்ணய விலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம்(9.2.2026) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போது இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபை பிரிவுகளிலும் நாளை முதல் நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
அதற்கு அமைவாக 1 கிலோ தனி இறைச்சி 2200 ரூபாய்க்கும் , 1 கிலோ முள் இறைச்சி 2000 ரூபாய்க்கும் அதில் (200 கிராம் முள்ளும் 800 கிராம் இறைச்சியும்) 1 கிலோ தனி முள்ளு 1200 ரூபாய்க்கும்,1 கிலோ ஈரல் 2500 ரூபாய்க்கும் விற்பனை செய்வதற்கு மாவட்ட செயலாளர் , தவிசாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் முன்னிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் இறைச்சி கடை உரிமையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வுக்கு கொண்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri