துஷிதவை இலக்கு வைத்த துப்பாக்கிச்சூடு! விசாரணைகளை ஆரம்பிக்கும் சி.ஐ.டி
புதிய இணைப்பு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷித ஹல்லோலுவ பயணித்த வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை, பதில் பொலிஸ்மா அதிபரின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
கொழும்பு நாராஹென்பிட கிரிமன்டல மாவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அடையாளம் தெரியாத 2 நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது..
இந்த துப்பாக்கிச்சூட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷித ஹல்லோலுவ படுகாயமடைந்துள்ளார்.
முக்கியமான ஆவணங்கள்
அவரிடம் இருந்த முக்கியமான ஆவணங்கள் சிலவற்றையும் துப்பாக்கிதாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொடவும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கிரீஸ் நாட்டில் பாரிய முதலீடு செய்துள்ளதாக சர்ச்சைக்குறிய கருத்தை துசித ஹல்லொலுவ அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்து தொடர்டபாக கடந்த 15 ஆம் திகதி அவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவதூறான அறிக்கை
இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக துசித ஹல்லோலுவ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சட்டத்தரணி அகலங்க உக்வத்த ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 4ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் சி ஐ டி யில் வாக்குமூலம் வழங்கி விட்டு சென்றிருந்தார்.
