தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் விசாரணை
தென்னிலங்கையின் காலிப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் நேற்று (02) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
நாகொட, வலகும்புர பிரதேசத்தில் வசிக்கும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் பலவந்தமாக மர்மநபர்கள் இருவர் உள்நுழைந்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரியின் மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற மர்மநபர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவி்ட்டுச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களே மடிக்கணனி மற்றும் கைத்தொலைபேசியைக் கொள்ளையடித்து, துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும் குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan