அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு: வெளியான மற்றுமொரு தகவல்
அமெரிக்க, சிகாகோ அருகே ஜூலை நான்காம் திகதியன்று சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர், கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் இரண்டாவது தாக்குதலைப் பற்றி யோசித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின் படி 21 வயதான துப்பாக்கிதாரி, தாக்குதலுக்கு பின்னர் விஸ்கான்சினுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தமது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
அங்கு மற்றொரு சுதந்திர தின கொண்டாட்டத்தை பார்த்த அவர், அதன் மீதும் தாக்குதல் நடத்த சிந்தித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்ற விசாரணையின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் அறிவிப்பு! நாட்டின் நிலைமை தொடர்பில் தகவல் |
நீதிமன்றத்தின் தீர்ப்பு
நீதிமன்றத்தில் நேற்று குறித்த துப்பாக்கிதாரி, முன்னிலையானபோது, அவரை பிணை இல்லாமல் தடுத்து வைக்குமாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்தநிலையில், சிகாகோ ஹைலேண்ட் பூங்காவில் தாக்குதலை நடத்திய பின்னர், தப்பியோடிய குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து, தாமும் ஒரு பெண்ணாக மாறுவேடமிட்டு தப்பிச்சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு வெளியேறி துப்பாக்கியை வீசியதை கண்காணிப்பு காணொளி காட்டுகிறது. பின்னர் அவர் தனது தாயின் சிற்றூந்தை எடுத்துக்கொண்டு சுமார் 150 மைல்கள் பயணித்துள்ளார்.
இதேவேளை துப்பாக்கிதாரியின் வீட்டில் இருந்து மேலும் 3 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.