முன்னாள் காதலி மீது துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் தலைமறைவு
பொலன்னறுவையில் தனது முன்னாள் காதலி மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலன்னறுவை மெதிரிகிய, மிரிஸ்ஹேன கடற்றொழிலாளர் கிராமம் அமைந்துள்ள பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
36 வயதுடைய ,திருமணமான ஒரு பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மறைந்திருந்து தாக்குதல்
மீனவர் கிராமத்தில் வசித்து வந்த குறித்த பெண் தேவையொன்றின் நிமித்தம் தன் வீட்டுக்கு முன்னால் உள்ள தாயாரின் வீடு செல்ல முயன்ற போது, மலசல கூடத்தின் பின்னால் மறைந்து நின்ற சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த பெண் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுடன் திருமணத்துக்கு முன்னர் காதல் தொடர்பைக் கொண்டிருந்த நபரொருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருப்பதாக தெரிய வந்துள்ள நிலையில், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam