இலங்கையில்18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய செய்தி
ஜனவரி மாதம் முதல் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தேசிய வருமான வரி திணைக்களத்தில் தமது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வருமான வரி திணைக்கள ஆணையாளர் ஏ.எம்.நபீர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், நபர் ஒருவருக்கு வருமான வரி செலுத்தக்கூடிய வகையில் வருமானம் இருக்குமானால் மாத்திரமே அவர் வருமான வரி செலுத்த வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், 18 வயதுக்கு மேற்பட்டோர் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் படி இலக்கமொன்றை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வரிக்கோவை
தற்போதுள்ள தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக இந்த இலக்கம் கட்டாயமானதாகுமென குறிப்பிட்டுள்ள அவர், பதிவு இலக்கத்தை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வரிக்கோவையை ஆரம்பித்தல் என்பது இரண்டு வெவ்வேறு விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நபர் ஒருவர் வரி செலுத்த தொடங்கும் போது அவருக்கான வரிக்கோவை ஆரம்பிக்கப்பட்டு விடும் எனவும் ஏ.எம்.நபீரால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |