இலங்கை மக்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
நாட்டில் ஆண்டுதோறும் நிகழும் மொத்த இறப்புகளில் 83 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa)தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் தரவுகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வயது வந்தோரில் 20 வீதமானோர்
அவர்களில், உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறியாமல் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 60,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களில் 4,000 பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர் அல்லது அங்கவீனமடைகிறார்கள் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் வயது வந்தோரில் 20 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 வீதமானோர் சிகிச்சை பெறுவதில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |