நிதி அமைச்சின் அதிகாரி மரணத்தில் வெளியான பகீர் தகவல்
நிதி அமைச்சகத்திலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு கடந்த 30ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணம் தொடர்பில் பல தகவல்கள் வெளிவருகின்றன.
இந்தநிலையில் உயிரிழந்த ரங்க ராஜபக்ஷ தான் மோசடி தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினார் என்று கூறப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்த மரணம் தொடர்பில் வெளிவரும் கருத்துக்கள் பலரை பாதித்துள்ளதாகவும் குறநிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..