குப்பை உணவும் கொடூர துன்புறுத்தலும்! சவுதியில் இலங்கை பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்
சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா இலங்கை பெண் ஒருவர் குப்பைத் தொட்டியிலுள்ள உணவை உட்கொள்வதாகவும் தகாத முறைக்கு தான் உட்படுத்தப்பட்டு துன்புறுத்துவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பிலான கருத்துக்களை கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து, தன்னை காப்பாற்றுமாரு கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநாகல் திம்புலாகல பகுதி
“குருநாகல் திம்புலாகல பகுதியில் இருந்து சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா என்ற பெண் தகாத முறைக்கு உட்படுத்தப்படுவதோடு, மற்றும் பல துன்பங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், குப்பைத் தொட்டியில் போடும் உணவையே தான் உட்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகலில் உள்ள வெளிநாட்டு முகவர் மூலமாக 2024 ஆம் ஆண்டு ஜுலை 03 திகதி சவுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் முதலில் ஒரு வீட்டில் வேலை செய்யும் போது பல துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தான் முகவர் நிலையத்துக்கு வந்த போது வேறு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு கோரிக்கை
இதன்படி தான் உடம்பில் சக்தி இழக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் மகள், தனது தாய் இந்த விடயங்களை தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது தொடர்பில் முகவர் நிலையத்திற்கு கதைத்தபோது எட்டு இலட்சம் பணத்தை செலுத்தியபின்னர் கதைக்குமாறும் தெரிவித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், தனது அம்மாவை இலங்கைக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
