எக்னலிகொட சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டேன்! முன்னாள் கடற்படை வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்

Sri Lanka Sri Lanka Police Investigation
By Shrikanth Jul 15, 2025 10:34 AM GMT
Report

2010 ஆம் ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட(prageeth Eknaligoda) சுட்டுக் கொல்லப்பட்டதையும் அவரின் சடலத்தையும் தான் கண்டதாகவும் அச்சந்தர்ப்பத்தில் அங்கு இருந்தாக நியூசிலாந்தில் தற்போது வசிக்கும் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறித்த திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை  ஊடகவியலாளர் ஒருவர் நடத்தும் குறித்த நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக இணைந்துகொண்டு போது பல விடைதெரியா முடிச்சுகளை கடற்படை வீரர் கட்டவிழ்த்துள்ளார்.

காணாமல் போன பெண்ணொருவர் காட்டுப்பகுதிக்குள் மீட்பு

காணாமல் போன பெண்ணொருவர் காட்டுப்பகுதிக்குள் மீட்பு

முன்னாள் கடற்படை வீரர்

பிரசன்ன பியசாந்த என்ற முன்னாள் கடற்படை வீரர் 2018 ஆம் ஆண்டு இறுதியில் நியூசிலாந்துக்கு தொழில் விசாவில் சென்று அரசியல் தஞ்சம் கோரிய நிலையில் இன்று நியூசிலாந்து நாட்டு பிரஜையாக உள்ளார்.

எக்னலிகொட சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டேன்! முன்னாள் கடற்படை வீரர் அதிர்ச்சி வாக்குமூலம் | Shocking Confession In Eknaligoda Murder Case

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற 2 நாட்களுக்கு முன் ஊடகவியலாளர் எக்னலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டார். தற்போது 15 வருடங்கள் கடந்துவிட்டன.

இந்த நிலையில், தான் 2010ஆம்  ஆண்டு திருகோணமலை டொக்யாட்டில் கடமையாற்றும் போது இரவு 8 மணிக்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும்,  அதன் பின்னர் இரவு 11 மணிக்கு, கொமோன்டோ ரவீந்திர விஜயபுர ஆணையின் படி கொழும்பு கடற்படை தலைமையகத்துக்கு கெப் வாகனத்தில் தான் அழைத்து வரப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தனக்கு சரியான திகதிகள் ஞாபகமில்லை எனவும்,  குறிப்பாக பெப்ரவரி 01 அல்லது 02 ஆம் திகதிகளில் இவை நடந்திருக்கலாம் எனவும் அந்த கடற்படை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் குறிப்பிடுகையில், 

தலைமையகத்திற்கு வந்த அன்று இரவு என்னை மீள கெப்வண்டியில் ஏற்றிக் கொண்டு பொப்பிலியான சுநேத்திரா தேவி பிரிவெனா பகுதிக்கு வந்தவுடன் அங்கு கெப் வாகனம் நிறுத்தப்பட்டது.

அப்போது எனது வாகனத்துக்கு முன் கறுப்பு நிற கெப்வண்டி நிறுத்தப்பட்டிருந்தது.  அந்த வண்டியில் கண்கள் கைகள் கட்டப்பட்ட நபர் ஒருவரை ஏற்றினர்.  அதன் பின்னர் அந்த கெப்வண்டி அங்கிருந்து சென்றது. பின்னர் நாங்கள் வந்த கெப்வண்டி தலைமையகம் திரும்பி பின்னர் ஹபரண நோக்கி பயணித்தது.

கோட்டாபயவிற்காக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்! அமைச்சருக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறும் மகிந்த தரப்பு

கோட்டாபயவிற்காக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்! அமைச்சருக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறும் மகிந்த தரப்பு

கறுப்பு நிற கெப் வண்டி

நாங்கள் செல்லும் போது எமக்கு முன்னால் குறித்த கறுப்பு நிற கெப் வண்டி சென்றது.

அதன் பின்னர் குறித்த கெப்வண்டியை நான் காணவில்லை. அப்போது நான் வந்த கெப்வண்டி மட்டக்களப்பு நோக்கி சென்று மட்டக்களப்பு கோட்டையை வந்தடைந்தது.

எக்னலிகொட சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டேன்! முன்னாள் கடற்படை வீரர் அதிர்ச்சி வாக்குமூலம் | Shocking Confession In Eknaligoda Murder Case

அங்கு குறித்த கெப்வண்டி நின்றதை நான் பார்த்தேன். அப்போது லெப்டினன் கொமாண்டோ பியந்த (கொத்து பியந்த) என்னுடன் வந்த நால்வரும் வெளியில் இறங்கி நின்றோம்.

கோட்டையில் இருந்த பாழடைந்த அறைக்கு கறுப்பு கெப்வண்டியில் கொண்டுவரப்பட்ட நபரை அதில் வந்தவர்கள் இழுத்து சென்றதை நான் பார்த்தேன்.

அதன் பின்னர் துப்பாக்கி வேட்டுச் சத்தம் அந்த அறையில் இருந்து எனக்கு கேட்டது. சில நிமிடங்களின் பின்னர் கொமோட்டோ பியந்த கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திர படகை எடுக்குமாறு சொன்னார்.

அங்கு மூன்று இந்திர படகுகள் காணப்பட்டது. அவர் காட்டிய படகை நான் இயக்கிய நிலையில் வைத்திருந்த போது சுட்டுக் கொள்ளப்பட்ட அந்த நபரை தூக்கி வந்து படகில் வைத்தனர்.

கோர விபத்தில் இருவர் பலி: உயிர்களை காப்பாற்ற போராடிய மக்கள்

கோர விபத்தில் இருவர் பலி: உயிர்களை காப்பாற்ற போராடிய மக்கள்

சூட்டு காயங்கள்

அப்போது நான் பார்த்ததில் அவரின் கழுத்தில் சூட்டு காயங்கள் காணப்பட்டன. பின்னர் என்னை அருகில் இருந்த தீவை நோக்கி படகை செலுத்தச் சொன்னார்கள்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம்

படகில் மண்வெட்டிகளும் இருந்தன. என்னை படகில் இருக்க சொல்லிவிட்டு சடலத்தை தூக்கிச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தனர்.

பின்னர் நாங்கள் வந்த கெப் வண்டியில் திரும்பி வந்து விட்டோம். பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னரே எனக்கு தெரியவந்தது. அன்று நான் பார்த்த சுட்டுக் கொள்ளப்பட்ட நபர் எக்னலிகொட என அறிந்து கொண்டேன்  என கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US