கடையொன்றில் உணவு பொருள் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி : நியாயம் கேட்டவர்கள் மீது தாக்குதல்
அனுராதபுரத்திலுள்ள கடையொன்றில் பனிஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்தவர்கள் இருவர் அதிலிருந்து பல்லி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்யப்பட்டது தெரியப்படுத்தியதையடுத்து கடையின் உரிமையாளர் கல்லஞ்சியாகமவில் உள்ள வீட்டு மாடியில் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் தாக்கியுள்ளார்.
பனிஸ் பொதி
அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரே இந்த பனிஸை கொள்வனவு செய்துள்ளனர்.
இபலோகம கல்லஞ்சியாகமவில் உள்ள கடையொன்றில் உணவுக்காக பொதி செய்யப்பட்ட பனிஸ் பொதி ஒன்றை கொள்வனவு செய்துள்ளனர்.
இருவரும் அதனை பாக்கெட்டை சேவை நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதை சாப்பிடுவதற்காக ஒரு துண்டை உடைத்து பார்த்துள்ளனர். அதில் பல்லி கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து முறைப்பாடு செய்துள்ளனர்.
இருவர் மீது தாக்குதல்
இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான இருவரும் தாக்கப்பட்டமை தொடர்பில் இப்பலோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் இப்பலோகம பொது சுகாதார அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டதில், தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் இயங்கி வரும் இந்த பேக்கரியிலேயே இந்த பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
