இராணுவத்தினரின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்
இராணுவ கட்டுப்பாடுகளையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுஷ்டிக்க அரசாங்கம் தடை விதித்திருந்தது. அங்கு யாரும் செல்லாத வகையில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், புலனாய்வாளர்கள், பொலிசார் என கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகை உள்ள இடத்தில் சிவாஜிலிங்கம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். அவரை இராணுவமும், புலனாய்வாளர்களும் சூழ்ந்து கொண்டனர். எனினும் பலத்த நெருக்கடிக்கு மத்தியிலும் அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.



Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri