சிறையில் பலத்த பாதுகாப்புகளுடன் ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லேவத்த தெரிவித்துளள்ளார்.
சந்தேகநபரான ஷிரந்தி ராஜபக்சவை பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நிதி மோசடி
சிரிலிய சவிய அமைப்பு ஊடாக ரிஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வழங்குவதாக கூறி, அதற்காக தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri