பௌத்த விரோத செயல்களில் ஈடுபட்டால் அரசாங்கம் கவிழும் என எச்சரிக்கை
பௌத்த விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டால் அரசாங்கம் கவிழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உமந்தாவே ஸ்ரீ சமந்தபத்ர தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகோடத்தே ஞானசார தேரருக்கு சிறை தண்டனை விதித்து அவரது காவி உடை களையப்பட்டமை குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கும் போது தவறு இழைத்திருந்தால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனை திருத்தி இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளார்.

அவ்வாறு ஜனாதிபதி அநுர தவறுகளை திருத்தி பொது மன்னிப்பு வழங்கி இருந்தால் இன்று பௌத்த சமூகத்தின் போற்றுதலுக்கு உள்ளாகி இருப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக பௌத்த சாசனத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவது பொருத்தமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் எப்பொழுதும் கௌதம புத்தருக்கு கீழே இருப்பவர் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
நாட்டில் சங்க நீதி என்று ஒன்று இல்லை, அரச சட்டம் மற்றும் பௌத்த சட்டம் என்று இரண்டு வகை சட்டங்கடீள உள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பௌத்த தேரர்கள் அரச சட்டத்திற்கு கீழ்ப்படிந்து செயல்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தர்மத்தின் படியான சட்டமும் அரச சட்டமும் உலகில் காணப்படுவதாகவும், அரசு சட்டத்திற்கு பௌத்தப்பிக்குகளும் அடிபணிந்து செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பொது மன்னிப்பு வழங்கும் போது இழைத்த தவறுகளை திருத்தி ஜனாதிபதி அநுரகுமார பொது மன்னிப்பு வழங்கியிருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது எனவும் பௌத்தபிக்குகள் இவ்வாறு குழுமி குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது எனவும் உமந்தாவே ஸ்ரீ சமந்த பத்திர தேரர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri