ஷிரந்தி ராஜபக்சவுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று மாலை (27) திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகமவிடம் இன்று (27) இதனை தெரிவித்துள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சார்பாக மனுதாக்கல் செய்யும் போது ஜனாதிபதி சட்டத்தரணி இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷிரந்தி ராஜபக்ச தற்போது பேஸ்மேக்கர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்..
எனவே இதனை சிறப்பு சூழ்நிலையாகக்கருதி, கிரிஷ் வழக்கில் சந்தேகநபரான, குடும்பத்தின் மூத்தவரான நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி, இதனை பரிசீலிப்பதற்காக நாளை (28) வழக்கை மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri