சிரந்தியின் சிரிலிய கணக்கில் 129 சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட பல கோடி ரூபாய்! சீனாவிலிருந்து வந்த எழுபது இலட்சம்..

Bribery Commission Sri Lanka Shiranthi Rajapaksa China Carlton House - Tangalle
By Kanthan Oct 08, 2026 01:24 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிரிலிய கணக்கு தொடர்பில் பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த 'சிரிலிய சவிய" என்ற அமைப்பு அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் ஒரு தேசிய அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பதிவு இலக்கம் 111-2-11/2011 என்றும், .அதன் முகவரியாக “கார்ட்ல்டன் பங்களா தங்காலை” என்றும் தெரியவந்துள்ளது.

இது, கொழும்பு ஜனாதிபதி மாளிகையின் தொலைபேசி இலக்கமாகவும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தச் கணக்கு முதன்முதலில் 2006ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கணக்கில் பல்வேறு தரப்பட்ட நபர்கள் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.

ஷிரந்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - அம்பலமாகவுள்ள கண் சிகிச்சையின் உண்மை நிலை

ஷிரந்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - அம்பலமாகவுள்ள கண் சிகிச்சையின் உண்மை நிலை

சிரிலிய கணக்கில் பணம் வைப்பிலிட்டவர்கள்

“அவாண்ட் கார்ட்” நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் பணம் வைப்பிட்டுள்ளார். இவர் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஒரு நபர்.

அதுமட்டுமன்றி சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் சார்பில் சீனாவில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விழாவில் நடத்தப்பட்ட ஒரு நன்கொடை சந்தை/விற்பனை மூலம் பல்வேறு தரப்பிடமிருந்தும் பெருந்தொகைப் பணம் திரட்டப்பட்டது.


இவ்வாறு திரட்டப்பட்ட பணம் இலங்கைத் தூதரகத்தின் அல்லது வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ கணக்கிற்கே சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் அந்த விழாவின் மூலம் கிடைத்த 70 இலட்சத்து 3,296 ரூபாய் பணம் இந்தச் சிரிலிய கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடத்திய விழாவில் கிடைத்த பணத்தை இவர்கள் எவ்வாறு தமது கணக்கில் வரவு வைப்பது? அது முற்றிலும் சட்டவிரோதமானதாகும். கடந்த 2013 ஜனவரி 15 ஆம் திகதி, சீனா - பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் போது இந்த விடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தச் சிரிலிய கணக்கிற்கு 88 சந்தர்ப்பங்களில் 82 இலட்சத்து 9 089 ரூபாய் பணம் கிடைத்துள்ளது. அந்த பணம் யாரால் வழங்கப்பட்டது என்பது தற்போது பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

சிரந்தியின் சிரிலிய கணக்கில் 129 சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட பல கோடி ரூபாய்! சீனாவிலிருந்து வந்த எழுபது இலட்சம்.. | Shiranthi Rajapaksa Ciaboc  

இது தொடர்பாக இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவும், கொழும்பு நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. அதேபோன்று, மேலும் 129 சந்தர்ப்பங்களில் இந்த கணக்கிற்கு 39,651,000 ரூபாய் (3 கோடிக்கும் அதிகமான பணம்) வந்துள்ளது.

அவ்வாறு வந்த 129 சந்தர்ப்பங்களிலுமே அப்பணம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு வந்த பணத்தை இட்டது யார்? எந்தக் காரணத்திற்காக எந்த நோக்கத்திற்காக இந்த பணம் கணக்கிலிருந்து திரும்பப் பெறப்பட்டது என்பது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.

திடீரென உருவான நிலையான கணக்கு

இந்தச் சிரிலிய கணக்கில் ஒரு நிலையான வைப்புக் கணக்கும் இருந்துள்ளது. அதில் சுமார் 100 மில்லியன் ரூபாய் (10 கோடி ரூபாய்) பணம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016 காலப்பகுதியில் இந்த கணக்கு தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அந்த காலகட்டத்தில் சட்டமா அதிபர் முறையான எவ்வித நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த விசாரணைகளை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது இந்த கணக்கிலிருந்து மேலும் பல கணக்குகளுக்குப் பணம் பரிமாறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி,  இந்த கணக்குடன் தொடர்புடைய பல ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிரிலிய கணக்கு மூன்று பெயர்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்சவின் இயற்பெயர் மேரி லூட்ஸ் விக்ரமசிங்க என்று நாம் அறிந்திருந்த போதிலும் இந்த வங்கி கணக்கில் “எஸ். ராஜபக்ச” என்ற பெயரிலேயே கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இது ஒரு கூட்டு வங்கியியல் கணக்காகும். இந்த கணக்கில் எம்.ஏ. குமாரி மற்றும் கே. திசாநாயக்க ஆகிய மேலும் இரு பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும் இணைந்தே மக்கள் வங்கியின் மருதானை சுதுவெல்ல கிளையில் இந்த கணக்கை ஆரம்பித்துள்ளனர். இந்த மூன்று பேரும் “கார்ல்டன் பங்களா தங்காலை“ என்ற முகவரியையே குறிப்பிட்டுள்ளனர்.

மனைவியை பார்ப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

மனைவியை பார்ப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

ஷிரந்தி எமது கட்சியின் உறுப்பினர் அல்ல! நாட்டை விட்டு ஓடப் போகும் திருடனைப் போல கைது : பொதுஜன பெரமுன அறிவிப்பு

ஷிரந்தி எமது கட்சியின் உறுப்பினர் அல்ல! நாட்டை விட்டு ஓடப் போகும் திருடனைப் போல கைது : பொதுஜன பெரமுன அறிவிப்பு

   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US