ஊழலில் மாட்டிக் கொண்ட சிரந்தி ராஜபக்ச:காப்பாற்றப்போகும் நபர் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை அரசால் கொள்வனவு செய்யும் போர்வையில் சொகுசு பஸ் ஒன்றை இறக்குமதி செய்து கால்டன் முன்பள்ளி பாடசாலைக்கு சொந்தமாக்கி கொண்ட மோசடியில் சிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சிரந்தியை காப்பாற்றும் நபர்
சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்ட சொகுசு பஸ் மோசடி தொடர்பிலான ஆவணங்கள் குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் இருந்து சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆனால் பல மாதங்களாக எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.கடந்த இரு நாட்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைககள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்வனவில் அரசுக்கு மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது.இந்த பஸ்ஸுக்கு கால்டன் முன்பள்ளியால் ஒரு சதமும் வழங்கவில்லை. இது தொடர்பான ஆவணங்கள் பல காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

நாங்கள் இது தொடர்பில் தொடச்சியாக ஆராய்ந்து பார்த்ததில் குறித்த ஊழலை வெளியில் கொண்டு வருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
ஆனால் இந்த கொள்வனவு ஊழலில் ராஜபக்ச காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் பொறுப்பேற்க போகிறார்.அவர் சிரந்தி ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக இதை செய்யப் போவதாக தெரியவந்துள்ளது.
புதன்கிழமை அவர் யார் என தெரியவரும்.ஆனால் சட்டத்திடங்களின் பிரகாரம் சிரந்தி ராஜபக்ச இந்த குற்றச்சாட்டில் இருந்து மீள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri