நந்தன குணதிலக்க மரணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை!
முன்னாள் அமைச்சரும் ஜே.வி.பியின் தலைமை பதவியில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணைந்து செயற்பட்ட நந்தன குணதிலக்க இயற்கை மரணமடையவில்லை.
இது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக் கொலை என பல சந்தேகங்கள் வெளிவந்துள்ளன.
பிரபல ஊடகவியலாளர் கல்ப குணரத்தின சர்ச்சைகுரிய செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவரின் இணையதளத்தில் இது தொடர்பில் விரிவான செய்தியும் வெளியிட்டுள்ளார்.
நந்தன கடைசி நேரத்தில் சொன்ன கருத்து
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நந்தன குணதிலக்க தனது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பியுள்ள தகவல்களை மேற்கோள் காட்டியே இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
நந்தன குணதிலக்க அனுப்பியுள்ள செய்தியானது,
“கடந்த ஒரு வருட காலத்தில் ஜே.வி.பியின் அந்தரங்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பொய்யான தகவல்கள், ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகள், கட்சியின் பொறுப்புணர்வு தொடர்பில் நான் மற்றும் வருன தீப்தி ராஜபக்ச மற்றும் பிரன்ஜித் விதாரன ஆகியோர் பல உண்மை தகவல்களை வெளியிட்டு விமர்சிப்பதால் எங்களை கொலை செய்வதற்காக ஜே.வி.பியின் கொலை கும்பல் மற்றும் அவர்களின் உதவிய அணியினர் எங்களை பின்தொடர்கின்றனர்.

அதற்காக செயற்படும் நபர்களின் திட்டங்கள் தொடர்பில் நாம் அறிவோம். அதற்கான ஆட்பலத்தை வழங்குவது பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆவார். அதனால் இதற்கு நீங்கள் தான் சாட்சியாளர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கல்ப குணரத்ன வலியுறுத்து
இது தொடர்பில் ஏதும் செய்தி போட்டீர்களாக என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், இல்லை என்று சொன்ன அவர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தூதுவராலயங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

நந்தன குணதிலக்கவுக்கு இன்றும் ஜே.வி.பியின் உள்ளக தொடர்புகள் இருப்பதாக வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பரிசோதனை நடத்துமாறும் மேலும் இருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் ஊடகவியலாளர் கல்ப குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri