ஜனாதிபதி அநுரவுக்கு கட்டுப்படாத அமைச்சர்: கம்மம்பில குறிப்பிடும் நபர் யார்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பயப்படாத அமைச்சர் ஒருவர் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கம்மம்பில வெளிப்படுத்தியுள்ளார்.
இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் லால் காந்தவின் அண்மைய செயற்பாடுகள் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு பாரிய பின்னடைவும் இழுக்கையும் ஏற்படுத்தியுள்ளது.
சிக்கலில் தவிக்கும் ஜனாதிபதி
ஆனால் ஜனாதிபதிக்கு அவரை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.அண்மையில் மிஹிந்தலை விகாராதிபதி தொடர்பில் தெரிவித்த கருத்து அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மக்கள் விடுதலை முன்னணி கட்சியில் அமைச்சர் லால் காந்த சிரேஷ்ட உறுப்பினராவார்.
88-89 ஆம் ஆண்டுகளில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு மேல் சிரேஷ்ட உறுப்பினர்.அநுராதபுர தொகுதிக்கு தலைவராக லால் இருக்கும் போது அநுர சாதாரண உறுப்பினர்.லால் வயதிலும் பெரியவர்.மேலும் தனது உயிரை பணயம் வைத்து கட்சியை கட்டியெழுப்பியவர்.
அமைச்சர் லால் காந்த 88-89 ஆம் ஆண்டுகளில் தான் செய்து கொண்டிருந்த யோகட் வியாபாரத்தை விட்டு விட்டு கட்சிக்கு வந்தார்.ஆனால் அநுர தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு வருவதாக இருந்துவிட்டார்.

டில்வின் சில்வா தான் அநுரகுமார திசாநாயக்கவை நேரடியாக மேலிடத்திற்கு கொண்டு வந்தவர். லால் நினைக்கிறார் நான் சிரேஷட உறுப்பினர்.கட்சித் தலைவரைவிட அர்ப்பணிப்பு செய்திருக்கிறேன்.
தனக்கு உரித்தான இடம் கிடைக்கவில்லை.அதனால் ஜனாதிபதிக்கு கட்டுப்படுவது அவசியமில்லை என நினைக்கிறார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam