மகிந்த குடும்பத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மியூசியஸ் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, ஊழலுக்கு எதிரான அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
ஊழல் மோசடி
2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிடப்பட்ட உறுதிப்பத்திரத்தின் மூலம் இந்த வீடு ஷிராந்தி ராஜபக்சவின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக சிரிலிய கணக்கிலிருந்த 350 இலட்சம் ரூபாய் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காணி ஆவணங்களை பரிசோதிக்கும் போது தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கலானது ஒரு ஊழல் மோசடி என சந்தேகிப்பதால், இது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊழலுக்கு எதிரான அமைப்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகாலையில் விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து! சாரதியின் சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam