ஒடிசாவில் எதிர்க்கட்சி தலைவராக நாமல்.. இந்தியாவின் முன்னணி நிறுவன நிறுவுனரின் நெகிழ்ச்சி பதிவு
இந்தியாவின் குடியரசுத்தின நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை அந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமொன்றின் நிறுவுனர் எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமொன்றின் நிறுவுனரான அச்யுதா சமந்த இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பதிவு
குறித்த பதிவில் அவர், "ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று, எங்கள் KIIT, KIMS மற்றும் KISS மாணவர்கள் ஒழுக்கத்துடனும் பெருமையுடனும் கொண்டாட ஒன்றுகூடுகிறார்கள்.

அவர்கள் அணிவகுத்துச் செல்வதையும், நிகழ்ச்சி நடத்துவதையும், பங்கேற்பதையும் பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவர் நாமல் ராஜபக்ச, பிரதிநிதிகள் குழுத் தலைவர் சித்ரல் பெர்னாண்டோ உள்ளிட்ட இலங்கையைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவுடன் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.
அவர்களின் வருகை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பைப் பிரதிபலித்தது. KIIT மற்றும் KISS இல் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்களின் சில சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்த பெருமைமிக்க நாளில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam