கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்! அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட திட்டம்
போலியாக தயார் செய்யப்பட்ட ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி குறித்த நாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (26) இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப சோதனை
சந்தேகநபர் 27 வயதுடைய பங்களாதேஷ் நாட்டவர் என தெரியவந்துள்ளதுடன் அவர் கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-665 மூலம் தோஹாவுக்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரது அனுமதிக்கு தேவையான ஆவணங்கள் கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, குறித்த ஸ்பெயின் விசா போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினுக்கு தப்பிச்செல்ல திட்டம்
குறித்த நபர், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக விசா வழங்கும் நிறுவனமொன்றூடாக 25,000 பங்களாதேஷ் டாக்கா (63,000 இலங்கை ரூபாய்) தொகையை செலுத்தி விசாவை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் குறித்த விசாவைப் பயன்படுத்தி தோஹா, கத்தார் வழியாக ஸ்பெயினுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குடிவரவு மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam