ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம்! அரபிக்கடலுக்குள் நுழைந்த அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக்கப்பல்
பிரித்தானியாவின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அரபிக்கடலுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலுக்கு வந்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டோமஹாக் ஏவுகணைகள்
மார்ச் 6 அன்று அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து புறப்பட்ட ராயல் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான HMS ஆன்சன் (HMS Anson ) வடக்கு அரபிக்கடலில், ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
இந்த நீர்மூழ்கிக்கப்பலில் டோமஹாக் ஏவுகணைகள் மற்றும் 1,600 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய டார்பிடோக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
ஈரானிய இலக்குகளைத் தாக்க, பிரித்தானியாவின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிக்க பிரித்தானியாவின் பிரதமர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் மத்திய கிழக்குக்கு வந்துள்ளது.
திடீரென இரகசியமாக புறப்பட்ட கப்பல்
இவ்வாறானதொரு நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் இறுதியில், பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ் என்சன், (HMS Anson )அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள தளத்திற்கு ஒரு மாத கால பராமரிப்புப் பணிகளுக்காக சென்றுள்ளது.

இருப்பினும், மார்ச் மாதம் முதல் வாரத்தில் அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் நிலைகொண்டிருந்த பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ் என்சன் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகளை முடிக்காமல் திடீரென இரகசியமாக புறப்பட்டுள்ளது.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri