ஜப்பானிய செம்படை போராளிக்குழுவின் உயர்பீட பெண் போராளி, சிறையில் இருந்து விடுதலை!
ஜப்பானிய செம்படை போராளிக் குழுவின் இணை நிறுவுனர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
76 வயதான ஃபுசாகோ ஷிகெனோபு, 2000 ஆம் ஆண்டு ஒசாகாவில் கைது செய்யப்படுவதற்கு முன்னர்,பல தசாப்தங்களாக தாம் கைதுசெய்யப்படுவதை தவிர்த்து வந்தார்.
ஜப்பானிய செம்படையின் செயற்பாடுகள், உலகளாவிய சோசலிசப் புரட்சியைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஃபுசாகோ ஷிகெனோபு துப்பாக்கியுடன்
அவர்கள் தொடர்ச்சியான பணயக்கைதிகள் மற்றும் கடத்தல்களை மேற்கொண்டனர்.
அத்துடன் இஸ்ரேலிய விமான நிலையத்தின் மீது ஒரு கொடிய தாக்குதலையும் நடத்தினர்.
1974 ஆம் ஆண்டு ஹேக்கில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் மீதான தாக்குதலின்போது, தூதர் மற்றும் பலர், மூன்று செம்படை போராளிகளால் 100 மணி நேரம் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, பிரான்ஸ் ஒரு செம்படை போராளியை விடுவித்தது.
இந்த தாக்குதலில் ஷிகெனோபு பங்கேற்கவில்லை,
ஆனால் குறித்த தாக்குதலை ஒருங்கிணைக்க உதவியதாக ஷிகெனோபுவை, ஜப்பானிய நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டில் கண்டறிந்தது.
இதனையடு்த்தே அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று சிறையிலிருந்து வெளியேறியபோது, தமது செயற்பாடுகளால் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக ஷிகெனோபு மன்னிப்பை கோரினார்.