நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து மகன் வெளியிட்ட தகவல்
பங்களாதேஷின் (Bangladesh) பிரதமர் பதவியில் இருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா (Sheikh Hasina) மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது மகனும் முன்னாள் தலைமை ஆலோசகருமான சஜீப் வசேத் ஜாய் (Sajeeb Wazed Joy) சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
"நாட்டை மாற்றியமைக்க அவர் முயற்சித்த போதிலும், அவரது அரசாங்கத்திற்கு எதிரான வலுவான பொதுமக்கள் போராட்டத்தினால் ஏமாற்றமடைந்த அவர், பதவி விலக முடிவு செய்தார்.
அவர் பங்களாதேஷில் ஆட்சிக்கு வந்து போது அது ஒரு தோல்வியடைந்த நாடாக கருதப்பட்டது எனினும், இன்று வரை ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பொருளாதார முன்னேற்றம்
கடந்த மாதத்தில், பங்களாதேஷில் 300இற்கும் மேற்பட்டோர் வன்முறைப் போராட்டங்களால் இறந்தனர். அத்துடன் இந்த போராட்டம் தொடங்கப்பட்டாலும், சிறிது காலத்தில் பிரதமர் பதவி விலகுவதற்கான கோரிக்கையாக மாறியது.
ஷேக் ஹசீனாவின் விமர்சகர்கள் அவர் ஊழல் மற்றும் சொந்த பந்தம் மட்டுமல்ல, உயர்நிலை மற்றும் சிவில் உரிமைகளைக் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இவை, அவர் கொண்டு வந்த பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்குள் மறைந்துவிட்டதாக பலர் குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில், எதிர்ப்பாளர்களைக் கையாள்வதில் அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |