டயானாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிராகரிப்பு
இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு(Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று(05) தீர்மானித்துள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை செய்ததாக கூறி, வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நியாயமான காரணங்கள்
எனினும், இந்த மனுவை விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri