சுதந்திர தின ஒத்திகையில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்ட சவேந்திர சில்வா
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பரசூட் ஒத்திகையில் காயமடைந்த படையினரைப் பார்வையிடுவதற்காக முப்படைகளின் பதவி நிலைப் பிரதானி சவேந்திர சில்வா சென்றுள்ளார்.
காயமடைந்த இராணுவ வீரர்களை நலம் விசாரிப்பதற்காக பாதுகாப்பு படைகளின் பதவிநிலைப் பிரதானி சவேந்திர சில்வா நேற்று(30.01.2024) மாலை தேசிய வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்துள்ளார்.
பரசூட் சாகச ஒத்திகை
எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையின் போது பரசூட் சாகச ஒத்திகையின் நான்கு வீரர்கள் திடீர் விபத்துக்குள்ளாகியிருந்தனர்.
அவர்களின் பரசூட் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொண்டதில் சரியாக விரியாத நிலையில் குறித்த படையினர் உயரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்திருந்தனர்.
சம்பவத்தில் இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காயமடைந்த படையினரை பார்வையிட்டு ஆறுதல் கூறிய சவேந்திர சில்வா, அவர்களுக்கான சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |