இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்திய சவேந்திர சில்வா
ருவாண்டா நாட்டுப் பாதுகாப்புப் படையுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே தமது நாட்டு இராணுவத்தின் நோக்கமாக இருப்பதாக இலங்கை ஆயுதப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு நேற்று(05.07.2024) விஜயம் செய்த போதே சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது தூதுக்குழுவினர் ஜூலை 5 ஆம் திகதி, கிகாலியில் உள்ள, அமைச்சு அலுவலகத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஜுவெனல் மரிசமுண்டாவைச் சந்தித்துள்ளனர்.
இனப்படுகொலை நினைவிடத்திற்கு விஜயம்
இதன்போது, இலங்கை ஆயுதப்படைக்கும் ருவாண்டா படைகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
முன்னதாக சவேந்திர சில்வா, கிகாலியில் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலை நினைவிடத்திற்கு விஜயம் செய்து 1994 துட்ஸி இனப்படுகொலையில் இறந்தோருக்கு தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.

ஜூலை 4 ஆம் திகதியன்று அமஹோரோ மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ருவாண்டா விடுதலையின் 30 ஆண்டுகள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர், சவேந்திர சில்வாவும் அவரது பிரதிநிதிகளும் இனப்படுகொலைக்கு எதிரான பிரசார அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam