கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு: பொலிஸார் சுற்றிவழைப்பு
கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் மணல் அகழ்விற்க்கு அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு நேற்று 05.07.2024 கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைவாகா கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தடையப் பொருட்கள் எதிர்வரும் பத்தாம் திகதி10 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan