ஷசீந்திர ராஜபக்சவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு
முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்சவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஷசீந்திர ராஜபக்சவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் ஷசீந்திரவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நட்டஈடு
கடந்த 6ஆம் திகதி ஷசீந்திர ராஜபக்சவை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நுகோகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்திருந்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் போது செவனகல கிரிபன்வெவ பகுதியில் சொத்து ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டதாகக் கூறி நட்டஈடு பெற்றுக்கொண்டதாக ஷசீந்திர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சொத்து அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் மோசடியான முறையில் ஷசீந்திர ராஜபக்ச இந்த சொத்துக்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்




