வெளிநாடு செல்வதாக வீட்டிலிருந்து வெளியேறிய இஷாரா செவ்வந்தி: உறவினர் வெளியிட்ட தகவல்
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் வெளிநாடு செல்வதாக இஷாரா செவ்வந்தி வீட்டை விட்டு சென்றதாக அவரின் உறவுமுறையான மாமா தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தியின் கைது தொடர்பில் உறவினர் மேலும் தெரிவிக்கையில்,
ருமேனியாவுக்கு செல்வதாகவே செல்லியிருந்தார். வீட்டில் அனைவரினதும் காலில் விழுந்து வணக்கம் செலுத்தியே வீட்டைவிட்டு சென்றார்.
அதன் பின்னர் எவ்வித தொலைபேசி அழைப்பும் எடுக்கவில்லை. ஒரு நாள் தொலைபேசி எடுத்து வேலை கிடைக்கவில்லை அதனாலே பேச முடியவில்லை என்றார்.'பட்டி' திறமையான நல்ல பிள்ளை ஏன் இப்படியானார் என எமக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கை
எனது இரண்டாவது அக்காவின் மகளே பிம்புத்தரதேவகே இஷாரா செவ்வந்தியாவார். அம்மாவுக்கு இருந்த திருமணத்துக்கு முரணான தொடர்பில் 2024 ஆம் ஆண்டு யுக்திய நடவடிக்கையில் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவளின் சித்தப்பா கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்ததால் செவ்வந்தியும் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கிருந்தே அவளின் வாழ்க்கை மாற்றமடைந்தது. ஒன்றரை வருடங்கள் இருக்கும் அவரின் இந்த மாற்றத்திற்கு. அதன் பின்னர் அவர் வீட்டில் தங்கவில்லை. நண்பர்களின் வீட்டிலேயே தங்கினார்.
விசிட் போவதாக சொல்வார். அப்போது சித்தப்பாவும் அவரின் தம்பியும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதிகம் பணம் புழக்கத்தில் இருந்தது.எதுவும் கேட்க முடியாது.
அதிகம் பணம் புழக்கம்
கெஹல்பத்தர பத்மே தொடர்பில் எமக்கு தெரியாது.பத்மேவின் அம்மா அக்கா பற்றி பேசியுள்ளார்.சிறையில் இருக்கும் போது ஏற்பட்ட பழக்கம் என்று கூறியுள்ளார்.
அமா அக்காவின் வீட்டுக்கு போவதாக சொல்வார். அவருடன் தேவாலயத்திற்கு போவார் .எமக்கு தெரிய அவளுக்கு காதல் தொடர்பு ஒன்றும் இருக்கவில்லை. நன்றாக நடனம் ஆடுவார்.
நடனம் ஆடுவார்
நாய் வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.பல விதமான நாய்களை வளர்த்தாள். அம்மாவுடன் இணைந்து பூக்கள் வளர்ப்பார். நித்திரை கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர்.
வேலைக்கு போகவில்லை. அவர் எவ்வித வேலையும் செய்யவில்லை. கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் பின்னர் டீ.வியில் கண்ட முதல் காட்சியிலேயே நான் அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.
அப்போதே தெரியும் வெளிநாட்டுக்கு போனவர் இங்கிருக்கிறார் என்று அப்போது மினுவாங்கொடை பொலிஸில் வந்து அம்மாவையும், தம்பியையும் கொண்டு சென்றனர் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




