சுனாமியின் போது விடுதலைப்புலிகளுக்கு உதவிய தமிழர்! சட்டத்துறையில் பெற்ற விருது
வருடாந்திர கனடிய சட்ட விருதுகளில் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதற்கான லிங்கன் அலெக்சாண்டர் சட்டக்கல்லூரி விருது பெற்றவராக சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருது கனடா முழுவதிலும் உள்ள முன்னணி சட்ட நிறுவனங்களில் இருந்து குறைவான பிரதிநிதித்துவ சமூகங்களுக்கான நீதிக்கான அணுகலை வலுப்படுத்துகின்ற, புதுமையின் மூலம் சட்ட சேவைகளை மேம்படுத்துகின்ற விருதாகும்.
சுனாமியின் போது விடுதலைப்புலிகளுக்கு உதவி

மேலும் மாணவர்களை வழிகாட்டுவது மட்டுமின்றி அதற்கும் அப்பால் சட்டக் கல்வியில் முதலீடு செய்கின்ற சட்ட நிறுவனத்துக்கு வழங்கப்படும் விருதாகும். சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா ஒரு பொறியியலாளர் மற்றும் சட்டத்தரணி ஆவார்.
அவர் கடந்த காலங்களில் பல விருதுகளை வென்றுள்ளதுடன் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார்.
சுனாமியின் போது விடுதலைப்புலிகளுக்கு உதவியதற்காக கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டு சிறையில் இருந்து சட்டம் பயின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan