கல்வி பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு என்றும் துணை நிற்பேன்: குகதாசன் உறுதி
திருகோணமலை மாவட்டத்தின் கல்வி சமூக மேம்பாடு, பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை கொண்டு செல்ல மக்களுக்காக என்றும் துணை நிற்பேன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (Sanmugam Kugadhasan) தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் (Trincomalee) உள்ள திரியாய் பகுதியில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி பணிகள்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், "நாடாளுமன்றம் இன்னும் சில காலங்களில் கலைக்கப்படலாம் எதிர்வரும் 2025இல் ஓகஸ்ட்டுடன் கலைக்கப்பட்டு விடும்.
நாங்கள் கற்கும் காலங்களில் மின்சாரம் இருக்கவில்லை. அப்போது எனது தந்தை யாழ்ப்பாணத்துக்கு கல்வி கற்பதற்காக அனுப்புவதாக இருந்த போதிலும் அங்கு செல்லாமல் இங்கு கற்று முதல் பல்கலைக்கழகம் சென்றேன். 2 கோடி ரூபாவை அபிவிருத்தி பணிக்காக பெற்றுள்ளேன்.
திரியாய் மாத்திரம் அல்ல தென்னை மர வாடி தொடக்கம் வெருகல் வரை அபிவிருத்தி பணிகளை செய்து மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவேன். தன்னாலான சகல உதவிகளும் செய்வதற்கான தயார் நிலையில் உள்ளேன்” என உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
