அரசாங்கத்தில் பலியெடுக்கும் நபராக மாறியுள்ள டில்வின் சில்வா: சுகீஸ்வர பண்டார எதிர்ப்பு
ஷானி அபேசேகரவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை வழங்கியதற்கு பதிலாக ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு வழங்கியிருக்கலாம் என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் CID பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.இவர் அரசியல்வாதிகளின் வீட்டுக்கு சென்று சட்டி பானைகள் கழுவுவேன் என்று சொன்னவர்.
[NA1ULH[
அரசாங்கத்தில் பலியெடுக்கும் நபர்
கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு பிரசார மேடைகளிலும் ஏறி தேசிய மக்கள் சக்திக்காக பிரசாரம் செய்தவர். இவர் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற அரசியல் சேவகராவார்.
இந்த அரசாங்கத்தில் பலியெடுக்கும் நபராக மாறியுள்ளார்.வளமான நாட்டை உருவாக்குவதற்கு பதிலாக வைராக்கியம் தீர்க்கும் நாடாக மாற்றமடைந்துள்ளது.
அதற்கான பெயர் பட்டியல்களை சானியும் டில்வின் சில்லாவும் தயாரித்து கொடுக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
