செவ்வந்திக்கு ஊடகங்கள் வழங்கிய பிரபலம்: கடுமையாக விமர்சித்த பேராசிரியர்
இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மயுர சமரகோன் (Mayura Samarakoon) கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டு இது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் தனது பதிவில்,
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் வருகையை அறிவிக்க முக்கிய இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டன.
இளைஞர், யுவதிகளின் மனதில் விதைக்கப்படும் தகவல்
ஒவ்வொரு மணி நேரமும் (breaking news) அறிவிப்பு செய்தது. இஷாராவின் வருகைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என பல செய்திகள் வெளியிடப்பட்டன. அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்.
இதனால் பாதாள உலகில் ஈடுபட்டு பிரபலமடைந்து இறந்தாலும் பரவாயில்லை என்ற உணர்வு இளைஞர், யுவதிகளின் மனதில் விதைக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் கதைத்த காணொளிகளில் மரியாதையாக தங்கை என உரையாடியுள்ளார். ஆனால் ஸ்பாவில் வேலை செய்த ஒரு பெண் கைது செய்யப்பட்டால் உரையாடும் பாணி கீழ்த்தரமானதாக இருக்கும்.
நாசாவில் வேலை செய்யும் இலங்கையர் வந்துபோவது அவரின் வீட்டு நாய்க்கு கூடத்தெரியாது. 96ல் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை கொண்டுவந்த அர்ஜுனவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.நாளைக்கு, இஷாரா ஒரு சோப்பு அல்லது கிரீம் விளம்பரத்தில் நடிக்க கூடும் என விமர்சித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam
