இந்தோனேசியாவில் சாணக்கியனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு
இந்தோனேசியாவில் (Indonesia) உள்ள ஜகார்த்தாவில் இடம்பெற்று வரும் நீலப் பொருளாதார மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R. Shanakkiyan) பேச்சாளராக பங்கெடுத்துள்ளார்.
குறித்த மாநாட்டில் பேச்சாளராக மே தினத்துக்கு அடுத்த தினமான 02.05.2024 அன்றிலிருந்து இரா.சாணக்கியன் பங்கெடுத்திருந்தார்.
கடல் சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் அதேவேளையில் கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய இலங்கை போன்ற நாடுகள் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது பற்றி இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையம்
அத்துடன், இலங்கை நாட்டில் காணப்படும் முக்கிய பிரச்சனைகளான சட்டவிரோத கடற்றொழில், பெரிய வர்த்தகர்களின் கடற்றொழில் ரீதியிலான சுரண்டல்கள் மற்றும் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக சாணக்கியன் உரையாற்றியுள்ளார்.
நீலப் பொருளாதாரம் என்பது கடல் மற்றும் கடற்கரைகள் தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளைக் குறிக்கும் அதே வேளையில், அதில் நிலைத்தன்மையின் ஒரு கூறு இருப்பதாக பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
எனவே, ஐரோப்பிய ஆணையம் அதை கடல் மற்றும் கடற்கரைகள் தொடர்பான அனைத்து பொருளாதார நடவடிக்கைகளாக வரையறுக்கிறது.
அச்சுறுத்தல்கள்
எதிர்கால நீலப் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் இந்தோ - பசுபிக் வளர்ச்சி மையங்கள் முக்கியமானதாக இருக்கின்றது.
இருப்பினும், அதிகப்படியான கடற்றொழில் மற்றும் கடல் மாசுபாடு, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற சவால்கள், நிலையான கடல் வள மேலாண்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
கூடுதலாக, பாதிக்கப்படக்கூடிய கடலோர மக்கள் மற்றும் கடலோர கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை கட்டமைத்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் கலாசார சேவைகளுக்கு ஏற்றவாறு நிர்வகித்தல் ஆகியவை நீலப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு முக்கியமான அம்சங்களாக உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |