யாழ். அச்சுவேலியில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்: மூவர் கைது
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள் உள்ளிட்ட மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் உள்ள இரு வீடுகள் மீது நேற்றைய தினம் (2.5.2024) நடத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதரர்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam
