காணிக் கொள்ளைகளை அம்பலப்படுத்திய சாணக்கியன்: அதிகாரிகள் திணறல் - செய்திகளின் தொகுப்பு
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமான் ஓடையில் இடம்பெறும் காணிக்கொள்ளை தொடர்பான விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் திரையிட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம்(24.07.2023) செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதிகாரிகள் முன்னிலையில் இதனை திரையிட்டுக் காட்டியுள்ளார்.
“புளுட்டுமான் ஓடையில் காணப்படும் அரச காணியின் பல ஏக்கர் நிலங்களை ஒரு சில நபர்கள் உயிரோடு இல்லாத மற்றும் வாக்காளர் அட்டையில் பெயர் இல்லாத நபர்களது பெயர்களைப் பயன்படுத்தி அந்த நிலங்களை உரிமையாக்கி, அங்கு காடழிப்பு செய்து நிலம் சீர்செய்யப்பட்டு எல்லைகள் இடும் நடவடிக்கைகளில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |