பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் காரணமாக சித்திரவதைக்குள்ளாகும் மக்கள் : இரா.சாணக்கியன் (Video)

Batticaloa Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam
By Kumar Dec 16, 2023 01:36 PM GMT
Report

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினம் (16.12.2023) நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நினைவேந்தல் தினத்தற்கு மாவீரர்களை நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற அடிப்படையில் பெண்ணொருவர் உட்பட 11பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் கொண்டு வரப்படும் தடை: வெளியான தகவல்

இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் கொண்டு வரப்படும் தடை: வெளியான தகவல்

தமிழ் அரசியல் கைதி

இதனடிப்படையில் இன்று சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் காரணமாக சித்திரவதைக்குள்ளாகும் மக்கள் : இரா.சாணக்கியன் (Video) | Shanakiyan Rasamanickam Tamil Political Prisoner

அதனை தொடர்ந்து சிறைச்சாலை ஆணையாளர் பிரபாகரனுடனும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், மிகவும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர் ஒருவரும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தேன். கடந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு தினத்தன்று நானும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தபோது மயிலத்தடு பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம்.

அத்துடன் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம். அந்த நேரத்தில் இது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் காரணமாக சித்திரவதைக்குள்ளாகும் மக்கள் : இரா.சாணக்கியன் (Video) | Shanakiyan Rasamanickam Tamil Political Prisoner

மட்டக்களப்பில் பொலிஸார் போதை வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மட்டக்களப்பில் பொலிஸார் போதை வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு அஞ்சும் பசில் ராஜபக்ச - செய்திகளின் தொகுப்பு

சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு அஞ்சும் பசில் ராஜபக்ச - செய்திகளின் தொகுப்பு


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US