தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: ஸ்கொட்லாந்தில் சாணக்கியன் வலியுறுத்தல் (Photos)
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது.
வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரணையில் குறித்த குழுவினர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இலங்கை அரசியல்
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திற்கு எவ்வாறான பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கை அரசியல் பிரமுகர்களையும், அரசியலில் ஈடுபாடுள்ள தரப்பினரைச் சந்தித்த ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் kenneth j gipson, இரா.சாணக்கியன் தனியாகச் சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போது கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையிலிருந்தது போன்றதொரு நிலைமையினையே தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் உள்ளது போன்று, தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளதாக Kenneth j gipson இதன்போது சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்யும்போது தமிழ் தரப்பினரைச் சந்தித்துப்
பேசவுள்ளதாகவும் அவர் இரா.சாணக்கியனிடம் தெரிவித்துள்ளார்.






தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
