பெண்களின் வாழ்வாதார நிதியை மோசடி செய்த அநுர தரப்பின் வன்னி எம்பி .. சாணக்கியன் கேள்வி!

Ilankai Tamil Arasu Kachchi Anura Kumara Dissanayaka Shanakiyan Rasamanickam Vanni
By Thileepan Apr 27, 2025 10:40 PM GMT
Report

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இருக்கிற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக் கூறுவாரா என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா, புளியங்குளத்தில் இன்று (27.04.2025) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், :வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ஓரணியாக நின்றால் மாத்திரமே எமக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு இந்த நாட்டிலே வரும் என்ற நம்பிக்கையில் வாழ முடியும். இல்லை என்றால் பலமிழந்த ஒரு சமூகமாகவே நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். தமிழரின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழரசுக்கட்சி மாத்திரே இன்று நேர்மையாக செயற்ப்பட்டு வருகின்ற ஒரு கட்சி.

பெண்களின் வாழ்வாதார நிதியை மோசடி செய்த அநுர தரப்பின் வன்னி எம்பி .. சாணக்கியன் கேள்வி! | Shanakiyan Questions About Vanni Mp

அதற்கு பல உதாரணங்களை கூறலாம். எங்கள் பிரச்சினைகள் பற்றி சர்வதேச சமூகத்திடம் நாங்கள் மாத்திரமே குரல் கொடுக்கிறோம். அண்மையில் வருகை தந்த பாரத பிரதமரை நாம் சந்தித்தோம்.

அவரை சந்திப்பதற்கு எமது கட்சியை சேர்ந்தவர்களும், ஏனைய தமிழ்த் தேசிய பிரதிநிதிகளையும் மக்கள் நாடாளுமன்றம் அனுப்பாவிட்டால் அவரை சந்திக்கும் அரசின் குழுவில் சிங்களவர்கள் மாத்திரமே அங்கம் வகித்திருந்தார்கள்.

ஜனாதிபதியின் மாங்குளம் விஜயம் 

அவர்கள் அந்த ரவுடி அமைச்சரையாவது கொண்டு போயிருக்கலாம். அண்மையில் முல்லைத்தீவில் கடற்றொழில் சங்கத் தலைவர் மீது ரவுடி அமைச்சரின் கும்பல் பலமான தாக்குதலை செய்திருக்கின்றது.

அவரது அடாவடித்தனத்தை காட்டியும் வன்னி மண்ணில் அடிவாங்காமல் போயுள்ளார் என்றார் அமைச்சர் என்ற பதவிக்கு அந்த மக்கள் மரியாதை கொடுத்துள்ளனர். இந்த ரவுடி அமைச்சரின் தலைவரான ஜனாதிபதி மாங்குளம் சென்றிருந்தார்.

அங்கு ஒரு தொழிற்பேட்டை வலயம் ஒன்றை அமைப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் நாடாளுமன்றில் வரவு - செலவு திட்ட விவாதத்தில் மாங்குளம் என்ற வார்த்தையே வரவில்லை.

எனவே தேர்தலுக்காக சொல்லும் பொய் வார்த்தைகளே இவை. சிங்கள மக்களும் ஜனாதிபதி சொல்வது போல ஒரு தாய் பிள்ளைகளாக வாழலாம் என்ற மன நிலையில் இருப்பதாக நான் நம்பவில்லை.

இனவாதிகளான கோட்டாபய அரசாங்கம் தங்களுடைய இனவாத பணியை சரியாக செய்ய தவறியமையாலே இன்று இந்த இனவாதிகளுக்கு அந்த மக்கள் வாக்களித்துள்ளனர். கோட்டாவை விட மோசமான இனவாதிகள் இவர்கள்.

சிங்கள பேரினவாத நாடாக தொடர்ந்து இலங்கையை வைத்திருப்பதே அவர்களது எண்ணம். அதற்கு தடையாக இருப்பவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்களே. இதனை மக்கள் மனதிலே வைத்திருக்க வேண்டும்.

ஊழல்வாதிகள் 

எதிர்வரும் தேர்தலில் அதனை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவு எமது கைகளுக்கு வந்தால் மாத்திரமே நாங்கள் செய்யும் போராட்டம் வலுவானதாக இருக்கும். ஊழல்வாதிகள் இல்லாத அரசு என்றார்கள். வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.

பெண்களின் வாழ்வாதார நிதியை மோசடி செய்த அநுர தரப்பின் வன்னி எம்பி .. சாணக்கியன் கேள்வி! | Shanakiyan Questions About Vanni Mp

அவர்கள் அரச ஊழியர்களாக இருந்த போது பெண்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்திற்காக வந்த நிதியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற. விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இது போல பல விடயங்களை நான் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளேன். ரவுடியாக செயற்படும் அமைச்சர்கள் உள்ளனர். எனவே ஜனாதிபதி இதற்கெல்லாம் பொறுப்புக்கூறா விட்டால் இந்த தேர்தலில் இந்த அரசு தோல்வியடைவதை எவராலும் மாற்ற முடியாது” என்றார். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US