அரசின் பொறுப்பற்ற செயல்களால் பாதிப்படைந்த சகலருக்கும் நீதி வழங்கப்படவேண்டும்: சாணக்கியன் வலியுறுத்து
அரசின் பொறுப்பற்ற தான்தோன்றித் தனமான செயல்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளான சகலருக்குமான நீதி வழங்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்(Rasamanickam Shanakiyan) தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுகுத் தலைமைத்துவம் வழங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மிக முக்கியமான தீர்மானங்களை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்த்தல் நடைபெறவுள்ளது. சிலவேளை நாடாளுமன்றத் தேர்த்தில் நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் எமது கட்சி சில இறுக்கமான தீர்மானங்களை எடுத்தால்தான் நாம் எமது மக்களையும் மண்ணையும் பாதுக்காக்க முடியும்.
இலங்கையிலே இருக்கின்ற 19 வது திருத்தச் சட்டத்தின் மூலம் 30 இற்கு மட்டுப்படுத்தப்பட்ட கபினட் அமைச்சரவையிலே விகிதாசார அமைப்படையிலே எத்தனை அமைச்சுப் பதவிகள் தமிழர்களுக்குக் கிடைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மேலதிக தகவல் - ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |